/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேரிடர் மீட்பு படை கடலுார் வந்தது
/
பேரிடர் மீட்பு படை கடலுார் வந்தது
ADDED : அக் 17, 2024 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பருவமழை மீட்பு பணிக்காக சென்னையில் இருந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் வந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை துவங்கியதை முன்னிட்டு, கடலுார் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், பருவமழை மீட்பு பணிக்காக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர், சென்னை ஆவடியில் இருந்து இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமையில் 25 பேர் நேற்று கடலுார் வந்தனர். அவர்கள் கடலுார் தேவனாம்பட்டினம் முகாமில் மீட்பு பணி உபகரணங்களுடன் தங்கியுள்ளனர். இக்குழுவினர் மழை பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளனர்.

