தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருவருள் இறை பணி மன்ற சொற்பொழிவு 

திருவருள் இறை பணி மன்ற சொற்பொழிவு 

திருவருள் இறை பணி மன்ற சொற்பொழிவு 


ADDED : நவ 18, 2024 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி; புவனகிரி திருவருள் இறை பணி மன்றம் சார்பில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

புவனகிரி திருவருள் இறைப் பணி மன்றம் சார்பில் மாதம் தோறும் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி நேற்று சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடந்தது. ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார். சீர்காழி சட்டநாதர் கோவில் ஓதுவார் கிருஷ்ணன் இறைவாழ்த்துப்பாடினார். 63 நாயனார்களில் ஒருவரான நின்றசீர் நெடுமாறன் நாயனார் குறித்து புவனகிரி கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் கல்யாணசுந்தரம் பேசினார்.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் 'நின்றசீர் நெடுமாற நாயனார்' குரு பூஜையை நடத்தினர். நிகழ்ச்சியில் கவிஞர் மோகன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை திருவருள் இறைப்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us