ADDED : டிச 27, 2025 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உழவார பணி நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருமுதுகுன்றம் கடந்தை திருமுறை கழகம் சார்பில் மார்கழி மாத சதயம் நட்சத்திரத்தையொட்டி ஆழத்து விநாயகர், அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவான் சன்னதியில் 50க்கும் மேற்பட்ட ஆன்மிக தொண்டர்கள் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடத்தினர். தொடர்ந்து, சுவாமி சன்னதி, பிரகாரம் ஆகியவற்றில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, குப்பைகள் அகற்றப்பட்டன.
சுவாமிகளின் ஆரத்தி விளக்குகள், மடப்பள்ளி உபகரணங்கள், சுவாமி வஸ்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன. வெளி பிரகாரத்தில் முட்புதர்கள் அகற்றப்பட்டன.

