ADDED : ஜன 03, 2024 06:52 AM

சிதம்பரம் : சிதம்பரம் அருகே சமை யல் செய்தபோது, சிலிண்டர் வெடித்து சிதறியதால், பெரும் பரபரப்பு நிலவியது.
சிதம்பரம் அடுத்த பாலுாத்தங்கரையை சேர்ந்தவர் கதிரவன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தமிழ்இலக்கியா. இவர், நேற்று காலை வீட்டில் காஸ் சிலிண்டரில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரின், ரெகுலேட்டர் பகுதியில் திடீரென காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
இதனை சற்றும் எதிர்பாரத தமிழ் இலக்கியா, வீட்டில் இருந்த குழந்தை மற்றும் மாமனார், மாமியாரை அழைத்துக் கொண்டு அவசரமாக வீட்டை வீட்டு வெளியில் ஓடினார்.
அடுத்த சில நிமிடங்களில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் உள்ள கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்ப நிலைய அலுவலர் பழனி சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
தமிழ் இலக்கியா சமயோ ஜிதமாக, குடும்பத்தினரு டன் வீட்டை விட்டு வெளி யேறியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.