/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லாரியில் ஏற்றிய வைக்கோல் தீப்பிடித்து எரிந்து சேதம்
/
லாரியில் ஏற்றிய வைக்கோல் தீப்பிடித்து எரிந்து சேதம்
லாரியில் ஏற்றிய வைக்கோல் தீப்பிடித்து எரிந்து சேதம்
லாரியில் ஏற்றிய வைக்கோல் தீப்பிடித்து எரிந்து சேதம்
ADDED : ஜூலை 25, 2025 02:44 AM
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மீது மின் கம்பி உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சாராகாரனுார் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன், 52; வைக்கோல் வியாபாரம் செய்கிறார். இவர் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி கிராமத்தில் உள்ள வயலில் வைக் கோல் வாங்கி தனது லாரியில் ஏற்றிக் கொண்டு ஸ்ரீபுத்துார் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். லாரியை, மேட்டுபுலியூரைச் சேர்ந்த சரவணன் ஓட்டினார்.
கள்ளிப்பாடி பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது, சாலையின் குறுக்கே உள்ள மின் கம்பி மற்றும் கேபிள் ஒயர், லாரியின் மேல் இருந்த வைக்கோல் மீது உரசியதில், தீப்பொறி ஏற்பட்டது. உடன், லாரியில் இருந்த வைக்கோல் எரியத் துவங்கியது.
உடன், அருகில் இருந்தவர்கள் கூச்சலிடவே, டிரைவர் லாரியை நிறுத்தினார். அருகில் இருந்தவர்கள், லாரியில் ஏறி வைக்கோல் கட்டுகளை கீழே தள்ளி விட்டனர்.
தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் 30 வைக்கோல் கட்டுகள்எரிந்து சேதமானது. சேத மதிப்பு 15,000 ரூபாய் ஆகும்.