/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருடப்பட்ட தேக்கு மரங்கள் திரும்பி வந்த அதிசயம்
/
திருடப்பட்ட தேக்கு மரங்கள் திரும்பி வந்த அதிசயம்
ADDED : டிச 20, 2024 04:31 AM

நெல்லிக்குப்பம்: திருடுபோன தேக்கு மரங்கள் நெல்லிக்குப்பம் நகராட்சியில் கொண்டுவந்து போட்டுள்ளனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி 15 வது வார்டு வாழப்பட்டில் நகராட்சியின் குடிநீர் டேங்க் உள்ளது.இந்த வளாகத்தில் 15 ஆண்டுகள் வளர்ந்த 2 தேக்கு மரங்கள் இருந்தன.பல ஆயிரம் மதிப்புள்ள இந்த 2 தேக்கு மரங்களையும் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வெட்டி எடுத்து சென்றனர்.
இதை வெட்டி எடுத்து சென்றது யார் என நகராட்சி ஊழியர்களுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
அதன்பிறகும் நகராட்சி அதிகாரிகள் போலீசில் புகார் அளிக்கவில்லை.
இந்நிலையில் மரங்களை திருடியவர்கள் நேற்று அதிகாலை தேக்கு மர துண்டுகளை நகராட்சி வளாகத்தில் போட்டு சென்றனர். அப்போது அங்கிருந்த இன்ஜினியர் வெங்கடாஜலம் மரங்களை ஏற்றி வந்த வாகனத்தையும்,ஆட்களையும் பிடிக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மரங்களை திருடியவர்களை கைது செய்யாவிட்டால் சாலை மறியல் செய்ய போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.