/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தார்சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
தார்சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : மார் 17, 2024 05:34 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தார்சாலை அமைக்கும் பணியை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
விருத்தாசலம் அடுத்த இருப்பு ஊராட்சி, கிழக்கிருப்பு - நண்டுகுழி கிராம இணைப்பு சாலையில் பஸ், லாரி, வேன் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த சாலை போடப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தற்போது பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது.
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில், ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட கனிமவள நிதி ரூ.43 லட்சம் மதிப்பில், பழுதடைந்த இந்த சாலையில், தார்சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.
இதனை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அப்போது, காங்., தி.மு..க, கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

