/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.4 கோடி திட்டப்பணி ஜவ்வாக இழுக்கும் மர்மம்
/
ரூ.4 கோடி திட்டப்பணி ஜவ்வாக இழுக்கும் மர்மம்
ADDED : டிச 10, 2025 08:45 AM
ஸ்ரீ முஷ்ணத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் மழை நீர் கால்வாய் கட்டுமான பணிகள் சரியான திட்டமிடல் இல்லாமல் செய்து வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் மழை நீர் வெளியேற கால்வாய் அமைக்கும் பணிக்கு 1.2 கி.மீ துாரத்திற்கு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் இந்த பணி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் துவங்கியது. ஓராண்டில் முடிக்க வேண்டிய பணி, ஓராண்டு முடிந்து 2 மாதங்கள் கூடுதலாகிவிட்டன.
இன்னும் பணிகள் சரிவர முடியவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக கால்வாய்கள் ஒரே நேராக தொடர்ச்சியாக கட்டாமல் பகுதி பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும், முடிந்துவிட்டதாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவித்துவிட்டது.
ஆனால் உண்மையில் பணிகள் முடியவில்லை. இதை கண்டித்து ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்திய நகரவாசிகள் கூட்டமைப்பு தற்போது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

