/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருநங்கைகளுக்கு தாலி கட்டும் ஐதீக நிகழ்வு
/
திருநங்கைகளுக்கு தாலி கட்டும் ஐதீக நிகழ்வு
ADDED : ஜூலை 14, 2025 04:00 AM

விருத்தாசலம் : திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழாவை முன்னிட்டு திருநங்கைகளுக்கு தாலி கட்டும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம், சாத்துக்கூடல் சாலையில் உள்ள ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த மாதம் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.
வேத வியாசர் பிறப்பு, கர்ணன் பிறப்பு, தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, கர்ணன் மகுடாபிேஷகம், அம்மன் பிறப்பு, அர்ச்சுணன் வில் வளைப்பு, அம்மன் திருக்கல்யாணம், அல்லி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.
முக்கிய நிழ்வாக, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. திருநங்கைகள் சுவாமி சன்னதியில் பூசாரிகளால் தாலி கட்டிக்கொள்ளும் ஐதீக நிகழ்வு நடந்தது. திருநங்கைகளுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. மாலை 5:00 மணியளவில் அரவாண் களபலி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
வரும் 18ம் தேதி மாலை 4:00 மணிக்கு, மணிமுக்தாற்றில் இருந்து சக்தி கரகம் அழைத்து வந்து, தீமிதி திருவிழா நடக்கிறது. 25ம் தேதி பால்குட ஊர்வலம், மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது.