/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய சுகாதார நிலையம் பூட்டி கிடக்கும் அவலம்
/
புதிய சுகாதார நிலையம் பூட்டி கிடக்கும் அவலம்
ADDED : ஜூலை 14, 2025 03:54 AM

நடுவீரப்பட்டு : பாலுாரில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல் பூட்டி கிடக்கும் அவலம் உள்ளது.
பண்ருட்டி அடுத்த பாலுாரில் அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் பழுதானதாது. இதனால் தற்காலிகமாக அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தில், துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. பாலுார் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் தினசரி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இதற்கிடையே, கடந்த 2023-2024 மாவட்ட அறக்கட்டளை நிதி திட்டத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சுகாதார நிலையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அரசின் நிதி வீணாகிறது. இரவு நேரத்தில் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.
தற்போது இயங்கி வரும் கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, துணை சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.