/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சலுான் கடை உரிமையாளர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு
/
சலுான் கடை உரிமையாளர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு
ADDED : மார் 01, 2024 12:15 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சலுான் கடை உரிமையாளர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் புதுக்குப்பம், மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் துரை ராஜ், 48. அப்பகுதியில் சலுான் கடை நடத்தி வருகிறார். மனைவி, ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள ரமணன் என்பவரது தள்ளுவண்டி கடையில் டிபன் சாப்பிட்டுவிட்டு, குறைவான தொகையை கொடுத்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை ரமணன், தனது மனைவி மற்றும் உறவினருடன் துரைராஜ் வீட்டிற்கு சென்று, திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துரைராஜ், அவரது கடை முன், பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
படுகாயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

