/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 13, 2024 02:25 AM

கடலுார் : சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கடலுார் அண்ணா பாலம் சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருமாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
பத்மநாபன், மதியழகன், பாஸ்கர், சுகுமார், வைத்தியலிங்கம், ராமசாமி, வள்ளி, ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் நிறைவுரையாற்றினார்.
மாவட்ட பொருளாளர் குழந்தைவேலு நன்றி கூறினார்.