/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பணியை முடிக்காத ஒப்பந்ததாரரின் அனுமதியை ரத்து செய்யவேண்டும்: நிர்வாகத்துறை இயக்குனர் உத்தரவு
/
பணியை முடிக்காத ஒப்பந்ததாரரின் அனுமதியை ரத்து செய்யவேண்டும்: நிர்வாகத்துறை இயக்குனர் உத்தரவு
பணியை முடிக்காத ஒப்பந்ததாரரின் அனுமதியை ரத்து செய்யவேண்டும்: நிர்வாகத்துறை இயக்குனர் உத்தரவு
பணியை முடிக்காத ஒப்பந்ததாரரின் அனுமதியை ரத்து செய்யவேண்டும்: நிர்வாகத்துறை இயக்குனர் உத்தரவு
ADDED : அக் 27, 2025 12:11 AM

நெல்லிக்குப்பம்: குறிப்பிட்ட காலத்தில் பணியை முடிக்காத ஒப்பந்ததாரரின் அனுமதியை ரத்து செய்ய நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் மதுசூதனன்ரெட்டி உத்தரவிட்டார்.
நெல்லிக்குப்பத்தில் ரூ.20 கோடி மதிப்பில் நடக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் மதுசூதனன்ரெட்டி நேற்று ஆய்வு செய்தார்.
வான்பாக்கத்தில் கசடுகழிவு சுத்திகரிப்பு நிலையம்,நகரம் முழுவதும் குடிநீர் வழங்க விஸ்வநாதபுரத்தில் நடக்கும் பணிகள்,திருக்கண்டேஸ்வரம் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார்.
நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதியதாக கட்டும் கட்டிடத்தை பார்வையிட்டார்.கடந்த பிப்ரவரி மாதமே முடிக்க வேண்டிய பணியை முடிக்காதது குறித்து, 3 முறை நோட்டீஸ் வழங்கியும் பணியை முடிக்கவில்லை என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, சம்பந்தபட்ட ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
இதேபோல்,ஆலை ரோட்டில் பள்ளம் தோண்டி 3 மாதத்துக்கு மேலாகியும் பணியை துவங்காத இடத்தை ஆய்வு செய்தார். இதில் கோபமடைந்தவர் பணிகளை குறித்த காலத்தில் முடிக்காத ஒப்பந்ததாரரின் அனுமதியை ரத்து செய்யவும், செயல்படாத பஸ் நிலையத்தை ஆய்வு செய்து உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, .கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார்,மண்டல நிர்வாக இயக்குனர் லட்சுமி,செயற் பொறியாளர் சுரேந்திரன்,கமிஷ்னர் கிருஷ்ணராஜன்,சேர்மன் ஜெயந்தி உடனிருந்தனர்.
வான்பாக்கத்தில் ஆய்வு செய்த போது எங்கள் பகுதி மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளதால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என கூறினர். இதற்கு இதுபோன்ற புகார்களால் எரிச்சல் அடைந்து பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று நிர்வாகத்துறை இயக்குனர் அறிவுறுத்தினார்.

