/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
3ம் தேதி ரயில் மறியல் போராட்டம் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
/
3ம் தேதி ரயில் மறியல் போராட்டம் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
3ம் தேதி ரயில் மறியல் போராட்டம் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
3ம் தேதி ரயில் மறியல் போராட்டம் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
ADDED : ஆக 30, 2025 07:09 AM
கடலுார் : கடலுார் மா.கம்யூ., அலுவலகத்தில், நேற்று மாலை அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கடலுார் லோக்சபா தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், செயற்குழு கருப்பையன், மாநகர செயலாளர் அமர்நாத், காங்., மாநில துணைத் தலைவர் சந்திரசேகரன், இந்திய கம்யூ., மாவட்ட துணைச் செயலாளர் குளோப், நகர செயலாளர் நாகராஜ், ம.தி.மு.க., பொதுக்குழு குமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டசெயலாளர் ரஹிம், மீனவர் பேரவை மாவட்ட தலைவர் சுப்பராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
மன்னார்குடி, கம்பன், ராமேஸ்வரன், உழவன் ரயில்கள் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்ல வேண்டும்.
கடலுார் துறைமுகத்திலிருந்து சேலம் செல்லும் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும்.
கடலுார் துறைமுகம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை உருவாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3ம் தேதி திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.