/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் 2ம் நாளாக போராட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் 2ம் நாளாக போராட்டம்
ADDED : பிப் 23, 2024 10:29 PM

கடலுார் : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் அனைத்து பணிகளை புறக்கணித்து நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஸ்ரீதரன், துணை செயலாளர் ராஜேஷ்பாபு, மத்திய செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். இதில், துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும்.
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில், மாவட்டம் முழுவதும் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் 405 பேர் பணிகளை புறக்கணித்து 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அரசு அலுவலகங்களில் வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டது.