ADDED : செப் 25, 2024 03:38 AM

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். உள்ளூர் மட்டுமல்லாது அரியலுார், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் மாவட்ட மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிக்கின்றனர்.
வெளியூர் மாணவர்கள் தங்குவதற்கு வசதியாக, கல்லுாரி பின்புறம் மிகவும் பிற்பட்டோர் மாணவர் மற்றும் மாணவியர் விடுதி செயல்படுகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், கல்லுாரியில் இருந்து விடுதிக்கு செல்லும் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
பெயர்ந்து கிடக்கும் சாலையில் மாணவர்கள் நடந்து செல்லும்போது, கற்கள் இடறி விழுந்து காயமடையும் அவலம் ஏற்படுகிறது.
எனவே, கல்லுாரி விடுதிக்கு செல்லும் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.