/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆக்கிரமிப்பில் சிக்கிய சாலை சேறும் சகதியுமான அவலம்
/
ஆக்கிரமிப்பில் சிக்கிய சாலை சேறும் சகதியுமான அவலம்
ஆக்கிரமிப்பில் சிக்கிய சாலை சேறும் சகதியுமான அவலம்
ஆக்கிரமிப்பில் சிக்கிய சாலை சேறும் சகதியுமான அவலம்
ADDED : ஏப் 02, 2025 05:50 AM

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த காவனூர் கிராமத்தில் வரதராஜப்பெருமாள் கோவில் எதிரில் அக்ரகார வீதி உள்ளது. வீதியின் மறுபுறம் சிவன் கோவில் தெரு உள்ளது.
இந்த இரு தெருக்களையும் இணைக்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பகுதியில் சிமெண்ட் சாலை மற்றும் மற்றொரு பகுதியில் தார்சாலையும் போடப்பட்டது.
நாளடைவில் அருகில் உள்ள வீடுகளில் உயரம் அதிகமானதால் சிமெண்ட் சாலை பள்ளமானது. இதில், சிலர் மணல் கொட்டி மேடாக மாற்றினர். தற்போது இந்த சாலை இருந்த சுவடே தெரியாமல் இருபுறமும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.
சாலையின் முகப்பில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் சாலையின் நடுவே தேங்கி நிற்பதால் சிமெண்ட் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ெருமாள் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடாகி இச்சாலை வழியாகவே சிவன் கோவில் தெருவிற்கு சென்று நகர் வலம் வருவது வழக்கமாக உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய சிமெண்ட் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

