ADDED : மே 14, 2025 11:38 PM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே, மர்மமான முறையில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணாடம் பேரூராட்சி, திருமலை அகரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. 45. கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் வசிக்கிறார்.
இவர் கடந்த 11ம்தேதி செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு மனைவியுடன் சென்றார்.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் கருப்புசாமியின் கூரைவீடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.
இதையறிந்த அருகிலுள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அப்பகுதி மக்கள் கருப்புசாமிக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
ஆனால் வீட்டில் இருந்து அரை சவரன், 5 ஆயிரம் ரொக்கம் உட்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.
தீ விபத்து குறித்து பெண்ணாடம் போலீசார், வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.