/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாடிக்கையாளர்கள் தேவையை நிறைவு செய்வதில் முதன்மை கீரப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலர் பெருமிதம்

ADDED : அக் 01, 2025 01:39 AM

வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றி வருகிறோம் என, கீரப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலர் செந்தில்குமார் கூறினார்.
இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது:
கடலுார் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் கீரப்பாளையத்தில் இடம் தேர்வு செய்து அமைச்சர் பன்னீர்செல்வம் முயற்சியால் முதல் முறையாக பெட்ரோல் பங்க், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பெரியக்கருப்பன் ஆகியோர், பெட்ரோல் பங்கை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். தற்போது இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பெருமை கொள்கிறோம்.
மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல், துறை அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், இந்தியன் ஆயில் நிறுவன திருச்சி கோட்ட மேலாளர் ராஜேஸ்வரன், விற்பனை மேலாளர் ஹரிஹரகண்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
24 மணி நேரமும் டீசல் மற்றும் பெட்ரோல் தரமான முறையில் வழங்கி வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். சுற்றுபகுதி மட்டுமின்றி வெளியூர் சுற்றுலாப் பயணியர்கள் வந்து செல்கின்றனர்.
சுத்திரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதி, வாகனங்களுக்கு காற்று பிடித்தல் வசதி உள்ளன. கூட்டுறவுத்துறை மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விழா கால வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.