/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறைந்த கட்டணத்தில் ஆங்கில வழிக்கல்வி; டி.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி பெருமிதம்
/
குறைந்த கட்டணத்தில் ஆங்கில வழிக்கல்வி; டி.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி பெருமிதம்
குறைந்த கட்டணத்தில் ஆங்கில வழிக்கல்வி; டி.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி பெருமிதம்
குறைந்த கட்டணத்தில் ஆங்கில வழிக்கல்வி; டி.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி பெருமிதம்
ADDED : அக் 01, 2025 01:38 AM
குறைந்த கட்டணத்தில் தரமான ஆங்கில வழிக் கல்வியை அளித்து வருவதாக சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி நிர்வாகி ராமச்சந்திரன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடைகோடி மக்களும் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு சேத்தியாத்தோப்பில் முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் என்பவரால் கடந்த 1953ம் ஆண்டு டி.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது.
72 ஆண்டுகளை கடந்து கல்வி பணியில் சிறந்து விளங்கும் டி.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் பிள்ளைகள் எந்தவித கட்டணமும் இன்றி அனுபவமிக்க ஆசிரியர்களின் மூலமாக சிறந்த கல்வியை கொடுத்து வருகிறோம்
இங்கு, பயின்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் உயரதிகாரிகளாக பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண்மை, வங்கிகளிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
கணிணி ஆய்வகம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் ஆய்வகங்கள் உள்ளன. மாவட்ட மற்றும் மாநில அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரணயர் இயக்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றிலும் மாணவர்கள் சிறந்த முறையில் திகழ்கின்றனர்.
மாணவர்கள் சிலம்பம், கராத்தே, கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் திறம்பட விளையாடி வருகின்றனர். தமிழ்கலை, இலக்கிய மன்றம், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், சமூக அறிவியல், மன்றங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். இப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று குறைந்த கட்டணத்தில் தரமான ஆங்கில வழிக் கல்வியை அளித்து வருகிறோம்.