sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பறிமுதல் வாகனங்கள் வரும் 22ம் தேதி ஏலம்

/

பறிமுதல் வாகனங்கள் வரும் 22ம் தேதி ஏலம்

பறிமுதல் வாகனங்கள் வரும் 22ம் தேதி ஏலம்

பறிமுதல் வாகனங்கள் வரும் 22ம் தேதி ஏலம்


ADDED : அக் 13, 2024 12:55 AM

Google News

ADDED : அக் 13, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட வாகனங்கள் வரும் 22ம் தேதி கடலுார் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.

எஸ்.பி., ராஜாராம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


மாவட்டத்தில் மது கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்-103, மூன்று சக்கர வாகனங்கள்-2; நான்கு சக்கர வாகனங்கள்- 9 என மொத்தம் 119 வாகனங்கள் கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு வளாகத்தில் 21ம் தேதி முதல் பார்வைக்கு வைக்கப்படும்.

இந்த வாகனங்கள் குறித்த அனைத்து விபரங்களுக்கும் டி.எஸ்.பி., மதுவிலக்கு அமல்பிரிவு, கடலுார் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.ஏலத்தில் பங்குகொள்ளும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்கள் வாகனத்தை பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள தொகை மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும். மற்றவர்கள் பொது ஏலத்தில் எடுக்கப்படும் தொகை மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும்.

ஏலம் எடுக்க விரும்புவோர் 22ம் தேதி காலை 8:00 மணிக்குள் முன்பணமாக இருசக்கர வாகனத்திற்கு ஆயிரம் ரூபாய், மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5,000 செலுத்த வேண்டும்.ஏலத்தில் பங்கேற்க வருவோர் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், ரேஷன்கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பாங்க் பாஸ்புக், ஆதார் கார்டு இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் ஜெராக்ஸ் கொண்டு வரவேண்டும்.

முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே வாகனத்தை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையை உடனடியாக செலுத்தி வாகனத்தை அன்றே பெற்றுக்கொள்ள வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., அலுவலகம் 04142-284353, கடலுார் மதுவிலக்கு பிரிவு எழுத்தர் 94981 55062 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.






      Dinamalar
      Follow us