/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பாலாலயம்
/
சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பாலாலயம்
ADDED : ஆக 31, 2025 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அருகே சுப்ர மணியர் சுவாமி கோவிலில் பாலாலயம் நடந்தது.
மடப்புரம் வக்காரமாரி கிராமத்தில் அமைந்துள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் கோவிலில் கும்பாபிேஷகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருப்பணி துவங்கப்பட இருப்பதால் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை கணபதி ஹோமம், நவக்கிரகமும் ஹோமமும் நடந்தது.
பூஜைக்கான ஏற்பாடுகளை சிதம்பரம் சந்திர பாலசுப்ரமணிய சைவ ஆச்சாரியார் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை மடப்புரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.