நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி; தம்பி மகளை காணவில்லை என பெரியப்பா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறையை சேர்ந்தவர் கலைக்கண் மகள் சவுமியா, 19. இவர் பெரம்பலுார் தனியார் கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
நேற்று முன்தினம் வீட்டில் துாங்கிய சவுமியாவை, அதிகாலையில் இருந்து காணவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெரியப்பா கலைச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

