/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு வலிப்பு
/
பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு வலிப்பு
ADDED : மார் 15, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு திடீரென வலிப்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார், புதுப்பாளையம் அரசு உதவிப்பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். அப்போது, ஒரு மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், சக மாணவியர், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஆசிரியர்கள், மாணவிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின், சிறிது நேரத்தில் மாணவி சகஜ நிலைக்கு திரும்பினார். இதைத்தொடர்ந்து, மாணவி மீண்டும் தேர்வு எழுதினார்.
இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

