ADDED : அக் 31, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : சிதம்பரம் அருகே வாலிபர் மயங்கி கீழே விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் கே.கே., நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 38; இவர் நேற்று முன்தினம் சிதம்பரம்அடுத்த ஏ. மண்டபம் அருகே மயங்கி கீழே விழுந்து இறந்து கிடந்தார்.
இது குறித்து, அவரது மனைவி தனலட்சுமி, 34; கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.