/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயிலில் வந்த வாலிபர் தவறி விழுந்து பலி..
/
ரயிலில் வந்த வாலிபர் தவறி விழுந்து பலி..
ADDED : அக் 07, 2024 06:08 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ராக்போர்ட் ரயிலில் இருந்து தவறி விழுந்த திருநெல்வேலி வாலிபர் உயிரிழந்தார்.
சென்னை - திருச்சி நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்ற ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், பொதுப்பயண பெட்டியில் படியில் அமர்ந்து வந்த வாலிபர், திருவெண்ணெய்நல்லுார் மலட்டாறு மேம்பாலத்தில் தவறி விழுந்தார்.
பயணிகள் புகாரின் பேரில், விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தார்.
விசாரணையில், அவர், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, மகிளடி சுகுமார் மகன் நாகர்ஜூன், 23, என்பதும், சென்னையில் டிரைவராக பணிபுரிந்ததும் தெரிந்தது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.