ADDED : ஆக 10, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி மனவளக்கலை மன்றம் சார்பில், ஞானாசிரியர் தினம், வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா, மனவளக்கலை மன்றத்தின் 2ம் ஆண்டு துவக்கம் என, முப்பெரும் விழா நடந்தது.
ஞானகுரு மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில், மனவளக்கலை மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ஞானகுரு மெட்ரிக் பள்ளி நிறுவனர் கோடிப்பிள்ளை, ஆழியார் உலக சமுதாய சேவா சங்கம் விரிவாக்க இணை இயக்குனர் அருள்ஜோதி முன்னிலை வகித்தனர். செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.
திருக்குறள் பேரவை தலைவர் சீனிவாசன், துணை தலைவர்கள் பிச்சையம்மாள், பரிமளாதேவி, சங்கீதப்ரியா உட்பட பலர் பங்கேற்றனர். இதில், வேதாத்திரி மகரிஷியின் வாழ்வியல் கருத்துகள் குறித்து பேசப்பட்டது.
பொருளாளர் பாண்டியன் நன்றி கூறினார்.