/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூதங்குடி நீரேற்று நிலையம் அருகே மது பாட்டில்களை வீசி செல்லும் அவலம்
/
பூதங்குடி நீரேற்று நிலையம் அருகே மது பாட்டில்களை வீசி செல்லும் அவலம்
பூதங்குடி நீரேற்று நிலையம் அருகே மது பாட்டில்களை வீசி செல்லும் அவலம்
பூதங்குடி நீரேற்று நிலையம் அருகே மது பாட்டில்களை வீசி செல்லும் அவலம்
ADDED : நவ 04, 2024 05:38 AM

சேத்தியாத்தோப்பு : வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பூதங்குடி நீரேற்று நிலையம் அருகே மது அருந்திவிட்டு குப்பைகளையும் பாட்டில்களை வீசிவிட்டு செல்வோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரி பூதங்குடி நீரேற்று நிலையத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வருகின்றனர். நீரேற்று நிலையம் கிணறு அருகேயே பூதங்குடி வி.என்.எஸ்., மதகும் உள்ள நிலையில் இங்கு வரும் நபர்கள் மது அருந்திவிட்டு குப்பைகளையும் காலி பாட்டில்களையும் வீசி செல்கின்றனர்.
பாட்டில்களை உடைத்து ஏரி தண்ணீரில் வீசி ஏறிவதால் மீன் பிடிக்க செல்லும் உள்ளூர் மீனவர்கள் கால்களில் கிளாஸ் ஓடு குத்தி காயம் ஏற்படுகிறது. இங்கு மது அருந்த கூடாது என மெட்ரோ நிறுவன அதிகாரிகள் காவல்துறை எச்சரிக்கை போர்டுகள் வைத்துள்ளனர்.
மது குடிப்பவர்கள் எச்சரிக்கை போர்டுகளை சிறிதளவு கூட பொருட்படுத்தவில்லை.
இங்கு மதுக்குடிக்க வரும் நபர்கள் பூதங்குடி வி.என்.எஸ்., மதகிலும் அமர்ந்து குடித்து விட்டு பாட்டில்களை போட்டு செல்கின்றனர்.
சென்னை மக்களின் குடிநீர் ஆதரமாக உள்ள ஏரியில் மது குடித்துவிட்டு காலிப்பாட்டில்களை வீசி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.