/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிராம மக்கள் திக்... திக்... புதராக மாறிய சாலை
/
கிராம மக்கள் திக்... திக்... புதராக மாறிய சாலை
ADDED : அக் 08, 2025 12:19 AM

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் சுடுகாட்டிற்கு செல்லும் சாலையில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் உள்ளது. மேலும் சி.என்.பாளையத்தை சேர்ந்த புத்திரன்குப்பம், கச்சிராயர்குப்பம், சொக்கநாதன்பேட்டை, நடுப்பேட்டை, காமாட்சிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இந்த வழியாக தான் எடுத்து செல்ல வேண்டும்.
இதே சாலையில் டாஸ்மாக் கடையும் உள்ளது. இந்த சாலையோரம் அதிகளவு புதர்கள் மண்டியுள்ளதால், அவ்வழியாக செல்லும் கிராம மக்கள், விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விஷ ஜந்துக்கள் சாலையில் உலா வருவதால் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு புதர்மண்டி காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
எனவே, புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.