/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அலைகழிக்கும் பத்திர பதிவு அதிகாரி
/
அலைகழிக்கும் பத்திர பதிவு அதிகாரி
ADDED : அக் 08, 2025 12:19 AM
மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை அதிகாரி பத்திரம் பதிவு செய்ய வருபவர்களிடம் தேவையில்லா காரணங்களை சொல்லி அலைக்கழித்து, பின் 'ப' வைட்டமின் பெற்றுக்கொண்டு பதிவு செய்கிறார்.
30 ஆண்டுகளுக்கு முன் கலெக்டர் கொடுத்த பட்டாவை, இட உரிமையாளரின் வாரிசுகள் விற்கவோ, வாங்கவோ உரிமை இல்லை என்றும் மெய்த்தன்மை சான்று, தடையில்லா சான்று வாங்கி வர வேண்டும் என அலைக்கழிப்பு செய்கிறார்.
அதன்பின் 'ப' வைட்டமினை கண்ணில் காட்டியதும் சத்தமின்றி பதிவை முடித்து தருகிறார். பத்திரப்பதிவு என்றாலே பணம் கொடுத்தால் தான் நடக்கும் என்ற நிலையை உருவாக்குவதற்காக, விதிகளை கூறி அலைக்கழித்து புரோக்கர்கள் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு பத்திரப்பதிவு செய்து அதிகாரி மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.