/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஜிலென்ஸ் துறை கண்காணிப்பு; எஸ்.பி., எச்சரிக்கை: அதிகாரிகளுக்கு 'கிலி'
/
விஜிலென்ஸ் துறை கண்காணிப்பு; எஸ்.பி., எச்சரிக்கை: அதிகாரிகளுக்கு 'கிலி'
விஜிலென்ஸ் துறை கண்காணிப்பு; எஸ்.பி., எச்சரிக்கை: அதிகாரிகளுக்கு 'கிலி'
விஜிலென்ஸ் துறை கண்காணிப்பு; எஸ்.பி., எச்சரிக்கை: அதிகாரிகளுக்கு 'கிலி'
ADDED : அக் 08, 2025 12:19 AM
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., ஜெயக்குமார் கடந்த வாரம் மைக் மூலமாக ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஆலோசனை வழங்கினார். அப்போது, 'கடலுார் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்படும் வழக்குகள் தொடர்பாக குற்றவாளிகளை பிடித்து ரிமாண்ட் செய்ய வேண்டும்.
எதிரிகளிடம் முன் ஜாமின் பெற கூறுவது. மருத்துவமனையில் அட்மிட் ஆக 'ஐடியா' கொடுப்பது போன்ற செயல்களில் குற்றவாளிகள் ஈடுபடுகிறார்கள் என்றால் பணம் கைமாறுவதாக அர்த்தம். மாவட்டத்தில் ஏராளமான கடைகளில் குட்கா, போதைப்பொருட்கள் பிடிக்கிறீர்கள்.
அந்த கடையை உடனே உணவு பாதுகாப்பு துறை மூலம் 'சீல்' வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் கடையை திறந்து விற்பனை செய்ய அனுமதிக்ககூடாது. தற்போது பண்டிகை காலமாக உள்ளது. மாமூல் வாங்கி பிரித்து கொள்ளும் வழக்கத்தை கைவிட வேண்டும். யாரையும் மாமூல் வாங்க கூறவில்லை. ஒரு சில இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பெயர் லஞ்ச ஒழிப்பு போலீசின் பெயர் பட்டியலில் உள்ளன. லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலர் இன்ஸ்பெக்டர்கள் வந்தால் பார்த்து கொள்ளலாம் என போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டால், வேலையை இழக்க வேண்டியதாக இருக்கும். எனவே, யாரிடமும் வசூல் செய்வதை நிறுத்தி விடுங்கள்.
பொதுக்கூட்டம் எங்கெங்கு நடத்த வேண்டும் என இடத்தை தேர்வு செய்ய கலெக்டர் கூறியுள்ளார். மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையை தவிர மற்ற இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த தகுதியான இடமா என பார்த்து தேர்வு செய்ய வேண்டும் என, பேசினார். எஸ்.பி.,யின் எச்சரிக்கை இன்ஸ்பெக்டர்களுக்கு 'கிலி' யை ஏற்படுத்தியுள்ளது.