/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணிடம் நகை பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலை
/
பெண்ணிடம் நகை பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலை
ADDED : அக் 07, 2024 06:07 AM
திட்டக்குடி: திட்டக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திட்டக்குடி, வதிஷ்டபுரம், பாட்டைத் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி செல்வி, 55; இவர், நேற்று மாலை 3:00 மணியளவில் தனியாக இருந்தபோது, பல்சர் பைக்கில் சாமியார் போன்று வந்த மர்ம ஆசாமி உடல், கை, கால் வலிகளுக்கு மாந்திரீகம் செய்து மருந்து தருவதாக கூறினார்.
இதை நம்பிய செல்வியின் முகத்தில் மர்ம ஆசாமி தண்ணீர் தெளித்தார்.
சிறிது நேரத்தில் செல்வி மயங்கினார். அப்போது அவர் அணிந்திருந்த 6 கிராம் தோடை கழட்டிக்கொண்டு மர்ம ஆசாமி தப்பிச்சென்றார். மயக்கம் தெளிந்த செல்வி தோடு காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். மேலும், இதுகுறித்து புகாரின்பேரில் வழக்குப் பதிந்து, மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

