/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாகுபடி பரப்பு கணக்கிடும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
/
சாகுபடி பரப்பு கணக்கிடும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
சாகுபடி பரப்பு கணக்கிடும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
சாகுபடி பரப்பு கணக்கிடும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : நவ 09, 2024 08:49 AM

கடலுார் : குறிஞ்சிப்பாடி அடுத்த கருங்குழி கிராமத்தில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணி நேற்று துவங்கியது.
அமைச்சர் பன்னீர்செல்வம் கணக்கிடும் பணியை துவக்கி வைத்தார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமாரவேல் உடனிருந்தனர்.
தொடர்ந்து வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்பொறியியல் துறைகள் சார்பில், 35 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 30 ஆயிரத்து 740 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கி, பேசுகையில், 'நடப்பு ஆண்டு ரபி பருவத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் தகவல்கள், பயிர் சாகுபடி கணக்கீடு மற்றும் புவியியல் வரைபடங்கள் இணைத்தல் ஆகிய பணிகளை மின்னணு முறையில் வேளாண்மை உழவர் நலத்துறை வாயிலாக முழுமையாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டு கருங்குழி பகுதியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கு வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த அலுவலர்களோடு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட வேளாண் கல்லுாரி மாணவர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடலுார் மாவட்டத்தில் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுக்கும் பணி நவம்பர் இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், துணை இயக்குனர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.