/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணி தீவிரம்
/
எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணி தீவிரம்
எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணி தீவிரம்
எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணி தீவிரம்
ADDED : நவ 18, 2025 06:37 AM

மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தல் பணியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது.
புவனகிரி சட்ட சபை தொகுதிக்குட்பட்ட கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. ஒட்டு சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
15 மேற்பட்ட பணியாளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். கெங்கைகொண்டான் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி, மண்டல துணை தாசில்தார் சாருலதா, வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பணிகளை ஆய்வு செய்தனர்.

