/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருட்டு பைக்கை விற்க முயன்ற இருவர் கைது
/
திருட்டு பைக்கை விற்க முயன்ற இருவர் கைது
ADDED : நவ 18, 2025 06:36 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே திருட்டு பைக் விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த தீவளூரை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் அஜித், 29; இவரிடம், அதே பகுதியை சேர்ந்த செங்குட்டுவன் மகன் அபிஷேக், 25; என்பவர், கடந்த 16ம் தேதி, தனது நண்பர் தாழநல்லுார் அருண்குமாரின் பைக்கை கொடுத்து 5 ஆயிரம் ரூபாய் கேட்டார். அதற்கு அஜித், 4,500 ரூபாய் கொடுத்துவிட்டு, வாகன உரிமம் கேட்டார்.
மொபைல்போனில் அனுப்பி வைப்பதாக கூறிச் சென்ற இருவரும், அன்று மாலை 3:00 மணியளவில், வேறொரு மொபட் கொடுத்து, பைக்கை திருப்பி தருமாறு கூறினர்.
சந்தேகமடைந்த அஜித், உறவி னர்களுடன் சேர்ந்து இருவரையும் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் விசாரணையில், பைக் மற்றும் மொபட் ஆகிய இரண்டுமே திருடப்பட்டது என்பது தெரியவந்தது.
அஜித் புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, அபிஷேக், அருண்குமார், 26; இருவரையும் கைது செய்தனர்.
இரண்டு வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

