/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு மருத்துவமனை ஆக்கிரமிப்பு பிரச்னை; மக்கள் கோரிக்கை மனு
/
அரசு மருத்துவமனை ஆக்கிரமிப்பு பிரச்னை; மக்கள் கோரிக்கை மனு
அரசு மருத்துவமனை ஆக்கிரமிப்பு பிரச்னை; மக்கள் கோரிக்கை மனு
அரசு மருத்துவமனை ஆக்கிரமிப்பு பிரச்னை; மக்கள் கோரிக்கை மனு
ADDED : நவ 18, 2025 06:35 AM

சிதம்பரம்: சிதம்பரம் 33வது வார்டு பொதுமக்கள் சார்பில், சப் கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் கோரிக்கை வலியுறுத்தி மனு அளிக்கப் பட்டது.
சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை ஆக்கிரமிப்பு குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இம்மருத்துவமனை அமைந்துள்ள, சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 33 வது வார்டு, நேரு நகர் பகுதியில் சில குடியிருப்புகளுக்கு அரசு மருத்துவமனைக்கு சொந்தமான இடம் என நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஆட்சபனை பதில் மனு அறிக்கையாக தாசில்தார் மூலம் கேட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று 33 வார்டு பொதுமக்களின் சார்பில், சிதம்பரம் நகர் மன்ற துணை தலைவர் முத்துக்குமரன், மா.கம்யூ கட்சி நகர செயலாளர் ராஜா தலைமையில், சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார் மற்றும் தாசில்தார் கீதா ஆகியோரிடம் 33வது வார்டு மக்கள் சார்பில் கோரிக்கை குறித்த பதில் மனு அளிக்கப்பட்டது.