
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தில் தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சம் மதிப்பில் நாடக மேடை கட்டடம் திறப்பு விழா நடந்தது,
அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, நாடக மேடையை திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், அவைத் தலைவர் செல்வராசு, துணை செயலாளர் பிரித்தீவி, ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் நன்மாறன், ஜெயசீலன்,ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் சாமிநாதன், பொருளாளர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தனர்.
கிளை செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.விழாவில் முன்னாள் சேர்மன் லட்சுமி நாராயணன்,துணை சேர்மன் சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

