/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரருக்கு நாளை தீர்த்தவாரி உற்சவம்
/
பாடலீஸ்வரருக்கு நாளை தீர்த்தவாரி உற்சவம்
ADDED : பிப் 07, 2024 11:49 PM
கடலுார்: தேவனாம்பட்டினம் பெண்ணையாறு சங்கமிக்கும் இடத்தில் நாளை பாடலீஸ்வரருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப்பெற்ற பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை 9ம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு, பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் தேவனாம்பட்டினம் பெண்ணையாறு சங்கமிக்கும் இடத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.
அன்று, கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு புதுப்பாளையம் மெயின்ரோடு வழியாக தேவனாம்பட்டினம் சென்று தீர்த்தவாரி உற்வசம் முடிந்து மீண்டும் இவ்வழியே கோவிலை வந்தடைகின்றது.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

