கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு
கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு
ADDED : செப் 19, 2026 02:12 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கைகளை திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், மணவாளநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது.
தற்போது, திருப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் இக்கோவிலில், சுற்றுச்சுவர் இல்லாத நிலையில், நேற்று நள்ளிரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அன்னதான உண்டியலை உடைத்து, 20 ஆயிரம் ரூபாயை திருடினர். விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
