/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்டப்பகலில் திருட்டு; வைரலாகும் வீடியோ
/
பட்டப்பகலில் திருட்டு; வைரலாகும் வீடியோ
ADDED : ஏப் 19, 2025 06:37 AM
கடலுார்; கடலுாரில் பட்டப்பகலில் கடையின் கல்லாப்பெட்டியிலிருந்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மஞ்சக்குப்பம் விநாயகர் கோவில் எதிரிலுள்ள ஒரு கடைக்கு நேற்று முன்தினம் 40வயது மதிக்க தக்க நபர் ஒருவர் சென்றார். அவர் கேட்ட பொருட்களை ஊழியர்கள் எடுக்க சென்ற நேரத்தில், கல்லாப்பெட்டியிலிருந்த பணம் மற்றும் அருகிலிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். கடை ஊழியர்கள் திரும்பிவந்து பார்த்தபோது, அந்த நபர் இல்லாதது கண்டு சந்தேகமடைந்து, கல்லாப்பெட்டியை பார்த்தபோது அதிலிருந்து பணம் திருடுபோனது தெரிந்தது.
தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கடையிலுள்ள சி.சி.டி.வி.,கேமராவில் அந்த நபர் பணம், பொருட்களை திருடும் காட்சி பதிவாகியிருந்தது.
அதைக்கொண்டு அந்த நபர் யார் என்பதை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மர்மநபர், கடையில் பணம்,பொருட்களை திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.