ADDED : மே 09, 2025 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் துறைமுகம் அருகே ரூ. 15,000 மதிப்பிலான பித்தளை பொருட்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் முதுநகர் அடுத்த நொச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன்,36; கூலித்தொழிலாளி. இவர் வீட்டின் பின்புறம் 50 கிலோ எடையுள்ள பித்தளை குவளைகளை வைத்திருந்தார்.
கடந்த 6ம் தேதி, அவற்றை தேடி பார்த்தபோது காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.