/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் சாதன பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்
/
மின் சாதன பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்
ADDED : அக் 18, 2025 07:13 AM
விருத்தாசலம்: பெரியகண்டியங்குப்பம் துணை மின்நிலையத்தில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தின் கதவை உடைத்து, மின் சாதன பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 40; இவர் பெரியகண்டியங்குப்பம் துணை மின் நிலையத்தில் உதவி மின் பொறியாளராக பணிபுரிகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த 12ம் தேதி தனது அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுள்ளார். மீண்டும் 15ம் தேதி அலுவலக்தை திறந்து பார்த்துள்ளார்.அப்போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, அலுவலகத்திலிருந்த ரூ.26 ஆயிரம் மதிப்பிலான இரும்பு மின்மீட்டர்கள், அலுமினிய கிளாம்புகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து உதவி மின்பொறியாளர் ஜெயபிரகாஷ் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மின்சாதன பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.