நடுவீரப்பட்டு: இரண்டு பைக்குகள் மோதிக்கொண்டதில் பெண் ஒருவர் பலத்த அடிபட்டு இறந்தார்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் எம்.ஜி.ஆர்.,நகரைச் சேர்ந்தவர் அரசன் மகன் ஜோதிலிங்கம். இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது தாய் ராஜவள்ளியை மொபட்டில் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
காமாட்சிபேட்டை அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த யமஹா பைக்கில் வந்தவர், தனக்கு முன்னால் சென்ற ஸ்கூட்டியை முந்த முயன்ற போது, ஜோதிலிங்கம் ஓட்டிவந்த மொபட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மூன்று வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் ஜோதிலிங்கம், ராஜவள்ளி, ஸ்கூட்டியில் வந்த பாலுார் காந்திநகரைச் சேர்ந்த பரமசிவன், அவரது மனைவி ரமா ஆகியோர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இதில் ராஜவள்ளி,52; சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நடுவீர்ப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.