ADDED : டிச 23, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி திருவருள் இறைப் பணி மன்றம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் விருது வழங்க நிகழ்ச்சி நடந்தது.
புவனகிரி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
வசுமதி இறை வாழ்த்து பாடினார். தனலட்சுமி வரவேற்றார். உதயசூரியன் துவக்க உரை யாற்றினார். ராமானுஜர் கூட நிர்வாகி பூவராகவன், ஓய்வு பெற்ற பொதுப்பணி துறை அதிகாரி மோகன் ஆகியோரை பாராட்டி சிறப்பு விருது வழங்கினர்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் இயற்பகை நாயனார் குறித்து பாரதிதாசன் மழலையர் பள்ளி நிர்வாகி அன்பழகன், தமிழ்த்தென்றல் திரு.வி.க., குறித்து கோகுலாச்சாரியார் சொற்பொழிவாற்றினர்.
தனலட்சுமி நன்றி கூறினார்.

