ADDED : பிப் 06, 2024 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் தெப்போற்சவம் நடந்தது.
நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர். கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
நேற்று காலை108 பெண்கள் பால் குடங்களை எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
உலக அமைதிக்காக அரசு வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது.
இரவு வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் செல்லியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
தொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது.

