/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாஜிஸ்திரேட் வீட்டில் திருட்டு விருத்தாசலத்தில் பரபரப்பு
/
மாஜிஸ்திரேட் வீட்டில் திருட்டு விருத்தாசலத்தில் பரபரப்பு
மாஜிஸ்திரேட் வீட்டில் திருட்டு விருத்தாசலத்தில் பரபரப்பு
மாஜிஸ்திரேட் வீட்டில் திருட்டு விருத்தாசலத்தில் பரபரப்பு
ADDED : மார் 18, 2024 05:53 AM
விருத்தாசலம், :  விருத்தாசலத்தில் மாஜிஸ்திரேட் வீட்டில் நகை, லேப்டாப் திருடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற மாஜிஸ்திரேட் தாரணி, 38; இவரது கணவர் மகேஷ்;  பண்ருட்டி நீதிமன்ற மாஜிஸ்திரேட். இருவரும், விருத்தாசலம், மணலுாரில் வசித்து வருகின்றனர்.
கடந்த 15ம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், நேற்று காலை பாதுகாவலர் எழில்மதி வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் முன்புற கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த மாஜிஸ்திரேட் மகேஷ் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 4 சவரன் செயின், லேப்டாப், வெள்ளி பாத்திரங்கள்,  பைக் உள்ளிட்டவை திருடுபோயிருந்தது.
தகவலறிந்த விருத்தாசலம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். கடலுாரில் இருந்து  மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய், வீட்டில் இருந்து மணலுார் ரயில்வே மேம்பாலத்தின் மறுபுறம் வரை ஓடி நின்றது.
இது குறித்து மாஜிஸ்திரேட் வீட்டின் பாதுகாவலர் எழில்மதி அளித்த புகாரில், விருத்தாசலம் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அருணகிரி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

