/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பு வயலில் உண்டியல் பெண்ணாடத்தில் பரபரப்பு
/
கரும்பு வயலில் உண்டியல் பெண்ணாடத்தில் பரபரப்பு
ADDED : மார் 01, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் கரும்பு வயலில் கிடந்த உண்டியலை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், விவசாயி.
இவரது வயலில் கடந்த 2 நாட்களாக கூலி ஆட்கள் மூலம் கரும்பு வெட்டும் பணி நடக்கிறது.
நேற்று காலை வழக்கம்போல், கரும்பு வெட்டும் பணி நடந்தது. அப்போது இரண்டரை அடி உயரமுள்ள உண்டியல் காணிக்கையின்றி கிடப்பது தெரிந்தது.
தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் உண்டிலை மீட்டு, எந்த கோவில் உண்டியல் எப்போது திருடப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.
கரும்பு வயலில் காணிக்கை உண்டியல் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

