/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டுத் திடல் இருக்கு... ஆனா... இல்ல...
/
விளையாட்டுத் திடல் இருக்கு... ஆனா... இல்ல...
ADDED : செப் 18, 2024 09:48 PM

பெண்ணாடம் அடுத்த தீவளூர் ஊராட்சியில், இக்கிராம இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்த, அரசுப்பள்ளி அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டது.
அதில், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. போதிய பராமரிப்பின்றி நாளடைவில் உபகரணங்கள் பாழானது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் அந்த இடத்தில் அம்மா விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. அதுவும் தற்போது இல்லை.
இதனால் இளைஞர்கள், மாணவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தீவளூரில் பாழாகி வரும் விளையாட்டு திடல் மற்றும் அம்மா விளையாட்டு மைதானத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம இளைஞர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.