ADDED : நவ 04, 2024 06:15 AM
புவனகிரி : புவனகிரியில் ரோந்து சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், வழிப்பறியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புவனகிரி போலீஸ் ஏட்டு செல்வம் மற்றும் போலீசார் அன்பரசு இருவரும் நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு புவனகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கீழ்புவனகிரி பஸ் ஸ்டாப் அருகில் சென்ற போது, யமாகா பைக்கில் வந்த இருவர் கத்தி மற்றும் கட்டையை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் பணம் பறித்துள்ளனர்.
இதை கண்ட போலீசார் இருவரையும் பிடிக்க முயன்றபோது பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசார் மடக்கி பிடித்ததில் ஒருவர் தப்பியோடினார்.
மற்றொருவரை பிடித்து விசாரித்ததில் புவனகிரி பெருமத்துார் செல்ல பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பிரவீன்,24; என்பதும், தப்பியோடிவர் கீழ்புவனகிரி லிங்கபைரவி நகர் சதீஷ் என்பதும் தெரிய வந்தது. உடன் பைக், கத்தி மற்றும் கட்டையை பறிமுதல் செய்ததுடன், பிரவீனை கைது செய்து, சதீைஷ தேடி வருகின்றனர்.