ADDED : ஜூன் 02, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் வரும் 6ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 1ம் தேதி விழா துவங்கியது. நேற்று முன்தினம் அர்சுணன், திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை 5ம் தேதி இரவு கரகத் திருவிழா, 6ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை தீமிதி திருவிழா நடக்கிறது. 7ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.